உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் பிரம்மோற்சவ விழா!

கண்டாச்சிபுரத்தில் பிரம்மோற்சவ விழா!

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது.
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவ விழா நேற்று காலை துவங்கியது.முன்னதாக காலை 9:00 மணி முதல் மூலவர் ராமநாதீஸ்வர், ஞானாப்பிகை அம்மன் உட்பட அனைத்து மூலவர்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

காலை 10மணியளவில் சிவாச்சாரியார்கள் பாலகிருஷ்ணன், சுப்ரமணியன் ஆகியோர் கொடியை ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர்.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா ரவிச்சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !