விருதை கோவில்களில் பொங்கல் சிறப்பு பூஜை!
விருத்தாசலம்: பொங்கலையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை, சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலை ஏகநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அண்ணாமலையார் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. வேடப்பர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன், சாந்த ஆஞ்சநேயர், சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆற்றங்கரை சித்தி விநாயகர், பெரியார் நகர் விஜய விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.