திருவாபரண தரிசனம்!
ADDED :3746 days ago
புதுச்சேரி: கோவிந்தசாலை அய்யப்ப சுவாமிகள் கோவிலில் சபரிமலையில் நடக்கும் திருவாபரண தரிசன விழா, (ஜன.,15) அதிகாலையில் துவங்கியது.
சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனதையொட்டி சிறப்பு நெய்
அபிஷேகம் நடந்தது. மாலை மணிக்கு திருவாரபரண ஊர்வலம் மணக்குள விநாயகர்
கோவிலில் இருந்து துவங் கியது. நேரு எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக
கோவிலை ஊர்வலம் வந்தடைந்தது. மகர ஜோதி ஏற்பட்டது. முதல்வர் ரங்கசாமி உட்பட பலர்
தரிசனம் செய்தனர்.