மார்கழி மாத பஜனை நிறைவு!
ADDED :3747 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பெருமாள் கோவிலில் மார்கழி மாத பஜனை நிறைவு விழா நடந்தது.
ரிஷிவந்தியம் ராஜநாராயண பெருமாள் கோவிலில் மார்கழி மாத தொடக்கத்தையொட்டி, கடந்த 17ம் தேதி பஜனை துவங்கியது. ஸ்ரீஆஞ்சநேயா பஜனை குழுவினர், சுப்ரமணியன் தலைமையில், தினந்தோறும் அதிகாலையில் கண்ணன் பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர். கடந்த 12ம் தேதி கூடாரவல்லி நிகழ்ச்சி நடந்தது.
மார்கழி மாத கடைசி தினத்தில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா நடந்தது. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடியவாறு சென்றனர்.