உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கோவில்களில் பொங்கல் சிறப்பு பூஜை!

கரூர் கோவில்களில் பொங்கல் சிறப்பு பூஜை!

கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோவில், தான்தோன்றி
மலை வெங்கடரமண கோவில், கரூர் மாரியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில்களில்,
பொங்கல் பண்டிகையையொட்டி, (ஜன.,15) அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். காலை, 6
மணி முதல், 8 மணி வரை கரூர் நகரப்பகுதிகளில், வீடுகளுக்கு முன் பொதுமக்கள் பொங்கலிட்டு,
கரும்பு, மஞ்சள் கொம்பு வைத்து சூரியனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !