உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச (ஜன.,15) கொடியேற்றப்பட்டது!

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச (ஜன.,15) கொடியேற்றப்பட்டது!

திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி என பெயர் வரக்காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா தைப்பூச விழாவின்போது நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் சுவாமி சன்னதி முன் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டு காலை கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜனவரி 18ஆம் தேதி நான்காம் திருநாளான நெல்லுக்கு வேலியிட்ட விழா நடைபெறுகிறது. இதில் வேதபட்டர் நெல்லையப்பர் கோயில் முன்பாக நெல்லை காயப்போட்டுவிட்டு செல்வதும், மழையில் நெல் நனைவது உள்ள திருவிளையாடல் கோயில் சிவாச்சாரியார்களால் நிகழ்த்தப்படும். இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.24ம் தேதி தைப்பூச
தீர்த்தவாரி விழா, கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெறும். தீர்த்தவாரியில் கலந்து கொள்ள நண்பகல் 12.30 மணிக்கு கோயிலில் இருந்து நெல்லையப்பர், காந்தி மதி அம்மன், அகஸ்தியர், குங்குலியக் கலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் தாமிரபரணி கரையில் தீர்த்தவாரியில் பங்கேற்பர். பின்னர் மகா தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு சிந்துபூந்துறை மண்டபத்திலிருந்து புறப்பட்டு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக பாரதியார் தெரு, தெற்குப் புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோயிலுக்கு வந்து சேரும். 25ஆம் தேதி சவுந்திர சபா மண்ட பத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறவுள்ளது. 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெளித் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !