உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் வாழைப்பழ சூறை!

சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் வாழைப்பழ சூறை!

பட்டிவீரன்பட்டி: சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழ சூறை விழா நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் சோலைமலை அழகர்மலை பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக தை 3ம் தேதி வாழைப்பழ சூறை விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கில் வாழைப்பழங்கள் சூறை விடப்படுகின்றன.பொங்கல் விழாவில் இயற்கை நமக்கு செய்த கொடைக்காக நன்றி செலுத்தும் விதமாக சேவுகம்பட்டியில் வாழைப்பழ சூறை விழா நடக்கிறது.வெளியூர்களில் குடிபெயர்ந்தவர்களும் இவ்விழாவிற்காக வந்தனர்.மேள, தாளத்துடன் ஒவ்வொரு வீடாகச் சென்று வாழைப்பழ கூடைகளுடன் கிராம பூசாரி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பூஜை செய்யப்பட்ட பழக்கூடைகள் சோலைமலை அழகர்பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வாழைப்பழங்கள் சூறை விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !