உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஜக்கம்மாள் வழிபாடு

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஜக்கம்மாள் வழிபாடு

உசிலம்பட்டி, :உசிலம்பட்டி எருமார்பட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜக்கம்மாள் வழிபாடு நேற்று நடந்தது.பல நுாறு ஆண்டுகளுக்கு முன் எருமார்பட்டியில் ஜமீன்தாரை திருமணம் செய்ய மறுத்து ஜக்கம்மாள் என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மட்டும் வழிபாடு செய்து வருகின்றனர். எரியூட்டப்பட்ட இடம் என்பதால் பெண்களுக்கு அனுமதியில்லை. ஜக்கம்மாளுக்கு தேங்காய், பழம், மஞ்சனம், காதோலை கருகமணி, துணிமணிகள், மாலை போன்ற பொருட்களை சமர்ப்பித்து வழிபாடு நடத்தினர். வழிபாடு முடிந்ததும் ஊரில் காத்திருந்த பெண்களுக்கு பிரசாதம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !