உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை!

வைத்தியநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை!

திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் திருஞானசம்பந்த குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் அசனாம்பிகை அம்மன் மற்றும் வைத்தியநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.  பூஜையில் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கோவில் செயல் அலுவலர் முருகன், தக்கார் பழனியம்மாள் மற்றும் சிவனடியார்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !