உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டாயுதபாணி கோவில் ஜன., 24ல் தைப்பூச விழா

தண்டாயுதபாணி கோவில் ஜன., 24ல் தைப்பூச விழா

நாமக்கல்: நாமக்கல் அடுத்த, கருங்கல்பாளையத்தில், கருமலை தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில், தினமும் உச்சிகால பூஜையும், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, கிருத்திகை, போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபடுகின்றனர். இங்கு, தைப்பூசத்திருவிழா, வரும், 24ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !