உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிக்கு காவடியுடன் பாதயாத்திரை புறப்பாடு

பழநிக்கு காவடியுடன் பாதயாத்திரை புறப்பாடு

தேவகோட்டை:பழநி தைப்பூச விழாவில் பங்கேற்க தேவகோட்டை பக்தர்கள் நேற்று பாதயாத்திரையை துவக்கினர். பழநி தைப்பூசத்திற்கு தேவகோட்டையில் இருந்து பல தலைமுறையாக பாதயாத்திரை சென்று முருகபெருமானை வழிப்படுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசம் ஜன.,24 ல் நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்றக நேற்று காலை ஏராளமான பக்தர்கள் 39 காவடியுடன் புறப்பட்டனர். பழநி செல்லும் காவடிகளுக்கும், குன்றக்குடி வரை பாதுகாப்பாக செல்லும் வேலிற்கும் நால்வர் கோயில் முன்பு கவிஞர் அருசோமசுந்தரன் மரியாதை செய்தார். குன்றக்குடியில் இருந்து பழநிக்கு ரத்தினவேல் எடுத்து செல்கின்றனர். தேவகோட்டை, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்களம், திருவாடனை, கண்ணங்குடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று முன்தினம் தேவகோட்டையில் தங்கி, நேற்று சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் இருந்து பாதயாத்திரையை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !