குன்னுார் முனீஸ்வரர் கோவிலில் பொங்கல் விழா
ADDED :3781 days ago
குன்னுார் : குன்னுார் டென்ட்ஹில் முனீஸ்வரர் கோவிலில், 50வது ஆண்டு பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி ராஜகணபதி, முனீஸ்வரருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து அலங்கார ரதம் புறப்பட்டது. டென்ட்ஹில், மகளிர் குழுவினர் சீர்தட்டு ஊர்வலம் தாரை, தப்பட்டை முழங்க குன்னுார் மவுண்ட் ரோடு பாலகிளவா வழியாக டென்ட்ஹில்லை அடைந்தது. அங்கு பொங்கல் விழா, அன்னதானம் ஆகியவை நடந்தன.