திருத்தணி முருகன் வீதியுலா
ADDED :3710 days ago
திருத்தணி: பொங்கல் பண்டிகையின் போது, மூன்று நாட்கள், திருத்தணி முருகப்பெருமான் மலைக்கோவிலில் இருந்து இறங்கி வந்து, திருத்தணியின் முக்கிய வீதிகளில் உலா வருவார். பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு, படிகள் வழியாக, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி யில் எழுந்தருளினார். பின், நகரம் முழுவதும் உள்ள வீதிகளில் உலா வந்தார். இரவு 8:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலை அடைந்தார்.