காளியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ADDED :3782 days ago
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் பழக்கடை காளியம்மன் கோவிலில், பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜலகண்டாபுரம் டவுன் பஞ்சாயத்து, சந்தைப்பேட்டை பழக்கடை காளியம்மன் திருக்கோவில், கடந்த, 7ம் தேதி, பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பொங்கல் திருநாளான நேற்று, பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு கோழிகளை பலியிட்டும், சுவாமியை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.