தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மத்திய படை தூய்மை பணி!
ADDED :3707 days ago
திருவண்ணாமலை,: திருவண்ணாமலை மாவட்டத்தில், பதற்றம் நிறைந்த பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய அதிவிரைவு படையினர், ஆய்வு பணி முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவிலில் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். கோவையைச் சேர்ந்த, 105வது பட்டாலியன் மத்திய அதிவிரைவு படையினர், திருவண்ணாமலை மாவட்டத்தில், பதற்றம் நிறைந்த பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மத்திய அதி விரைவு படை துணை கமாண்டன்ட் ஜாபர் இஸ்லாம், உதவி கமாண்டன்ட் கிளாரன்ஸ் ஆகியோர் தலைமையில், 60 பேர் கொண்ட குழுவினர், 13ல் திருவண்ணாமலைக்கு வந்தனர். ஒரு வாரமாக நடந்த ஆய்வு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இக்குழுவினர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், நேற்று காலை துப்புரவுபணியில் ஈடுபட்டனர்.