உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலாவுக்கு உணவு படைத்து பெண்கள் வழிபாடு!

நிலாவுக்கு உணவு படைத்து பெண்கள் வழிபாடு!

திருப்பூர்: மங்கலம் வேட்டுவபாளையத்தை சேர்ந்த பெண்கள், நிலாவுக்கு உணவு படைத்து, வழிபாடு நடத்தி, இறைவனுக்கு நன்றி செலுத்தினர். மங்கலம் அடுத்த வேலாயுதம் பாளையம் குழந்தை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூசத் விழாவை ஒட்டி, நேற்று பகல், 12:00க்கு, கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி, யாகசாலை பூஜை, அஷ்டபலி பூஜை, சுவாமி வீதி உலா நடந்தது. 23ம் தேதி, மாலை, 6:00க்கு திருக்கல்யாணம், யானை வாகன பவனி நடக்கிறது. 24ம் தேதி, காலை, 6:00க்கு, சுவாமி திருத்தேருக்கு எழுத்தருளல்; மதியம், 3:00க்கு, தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி புத்துõர், பெரியபுத்துõர், வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள், நிலாவுக்கு உணவு படைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அவ்வகையில், வேட்டுவபாளையம் மற்றும் சுற்றுப்பகுதி பெண்கள், தங்களது வீட்டில் இருந்து பழம், சர்க்கரை எடுத்து வந்து, வழிபாட்டை நேற்று துவக்கினர். நிலாவுக்கு உணவு படைத்த பெண்கள், கும்மியடித்து, பாட்டுப்பாடி, நன்றி செலுத்தினர். அப்பகுதி பெண்கள் கூறுகையில்,‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு பதார்த்தம் வைத்து வழிபாடு நடத்தப்படும்; கடைசி நாளில்  இனிப்பு படைத்து வழிபடுவோம். தேர்த்திருவிழா முடிந்தாலும், 26 வரை, நிலாச்சோறு வழிபாடு நடக்கும்.  முன்னோர் காட்டிய வழியை பின்பற்றி, பழமை மாறாமல் பின்பற்றி வருகிறோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !