உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் தங்க கோபுரத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி!

ஆண்டாள் தங்க கோபுரத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி!

ஸ்ரீவில்லிபுத்தூர்;“ஆண்டாள் கோயில் தங்கவிமானம் கும்பாபிஷேகம் முடிந்த பின், நாளை (ஜன.,20) மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தங்கவிமான கோபுரத்தை தரிசிக்க அனுமதிக்கபடுவார்கள்,” என, தக்கார் ரவிசந்திரன் தெரிவித்தார்.மேலும் அவர், இதற்காக தெற்கு மற்றும் வடக்கு மாடவீதிகளில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக, தற்காலிக படிகள் அமைக்கபட்டுள்ளன. இதன் மூலம் தங்கவிமானத்தை முழுவதுமாக சுற்றிபார்க்கும் வசதியை கோயில் நிர்வாகம் செய்துள்ளது, என்றார்.‘தங்கவிமான தரிசனத்தை நேரில் தரிசிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து,’என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !