உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூர்வாரப்படாத கோவில் குளம்

தூர்வாரப்படாத கோவில் குளம்

நீலாங்கரை: செங்கேணியம்மன் கோவில் குளத்தை, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழிங்கநல்லுார் மண்டலம், 192வது வார்டில், செங்கேணியம்மன் கோவில் குளம் அமைந்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில், கழிவுநீர் கலக்கிறது. ஆக்கிரமிப்பின் பிடியில் குளக்கரைகள் சிக்கியுள்ளன. குளம் துார்வாரப்படாததால் செடி, கொடிகள் முளைத்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. குளத்தில் பிளாஸ்டிக் கழிவு கொட்டப்படுவதால், நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் நிலவுகிறது. குளக்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !