உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் இன்று ஆடித்தபசு

பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் இன்று ஆடித்தபசு

பேய்க்குளம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் (பேய்க்குளம்) சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று நடக்கிறது. சாத்தான்குளம் தாலுகா ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயில் ஆடித்தபசு திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிறப்பு அம்சமாக ஆடித்தபசுக் காட்சி திருவிழா இன்று இரவு நடக்கிறது. 11ம் திருநாளை முன்னிட்டு இன்று காலை சாயரக்ஷ பூஜை நடக்கிறது. பகலில் விசேஷ பூஜை தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானமும், இரவு 8 மணிக்கு சான்றோர் கலைக்குழு சார்பில் இளையபெருமாள் அவர்களின் அய்யாவழி ஆன்மீக கச்சேரி நடக்கிறது. இரவு 10 மணிக்கு திருக்கல்யாணம் தபசுக்காட்சி ஆகியவை நடக்கிறது. பின்னர் இரவு 12 மணிக்கு சப்பரபவனியை அடுத்து சுவாமி அம்பாள் நகர்வலம் வருதல் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் நாராயண பெருமாள், ஆலய பக்தர்கள் சங்க தலைவர் பொன் சேர்மத்துரை, ஆடித்தபசு நிர்வாகக் குழுவினர் உட்பட விழாக் கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !