குமார சுவாமி கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED :3557 days ago
திருவள்ளூர் : புல்லரம்பாக்கம் குமார சுவாமி கோவிலில், 108 பால்குட அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத குமார சுவாமி கோவிலில், நேற்று, 25ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடந்தது.இதில், 108 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின், மூலவர் குமார சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.மாலையில் உற்சவர் வீதிஉலா வந்தார். இதில், புல்லரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.