கள்ளக்குறிச்சியில் சிதம்பரேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
ADDED :3553 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் ஆற்றுத்திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. உற்சவ மூர்த்திகள் கோமுகி நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு சிவகாமி, ஹஸ்ர@தவர் ”வாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து ”வாமி வீதியுலா நடந்தது. வழிபாட்டினை பாலசுப்ரமணியன் குருக்கள் செய்துவைத்தார். அதேபோல் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கோதண்டராமர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. கோமுகி ஆற்றங்கரையில் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அலங்கார தீப வழிபாடு, உபச்சார மந்திர பூஜைகள் நடந்தது. ராம பக்தர்கள் நாம சங்கீர்த்தன பாடல்கள் பாடினர். பூஜைகளை காஞ்சி சங்கரா கல்லூரி மாணவர் சிவாகணேஷ் செய்து வைத்தார்.