சேரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3549 days ago
மாமல்லபுரம் : வெண்பேடு சேரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. திருப்போரூர் அடுத்த, வெண்பேடு கிராமத்தில், சேரியம்மன் கோவில் உள்ளது. கிராம பொது கோவிலான இக்கோவிலில், கிராமவாசிகள் நன்கொடை மூலம், அம்மன் மூலவர் சன்னிதி விமானம் புதுப்பிக்கப்பட்டும், மகா மண்டபம் கட்டப்பட்டும், திருப்பணிகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன், முதற்கால யாகசாலை பூஜை துவங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு வழிபாடுகளுக்கு பின், நேற்று காலை, 4ம் கால யாகபூஜை நடந்து, காலை 10:00 மணிக்கு, மூலவர் சன்னிதி விமானத்தில், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.