வேதகிரீஸ்வரர் கோவிலில் 24ல் தெப்பம்
ADDED :3549 days ago
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம், சங்குதீர்த்த குளத்தில் வரும், 24ம் தேதி நடைபெற உள்ளது.திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில், சங்குதீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றும் சிறப்புக்குரியது. இக்குளத்தில், தைப்பூச நாளில் தெப்ப உற்சவம் நடைபெறும்.தற்போது இந்த உற்சவம், வரும் 24ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, இக்குளத்திலும்; 25ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, பக்தவத்சலேஸ்வரர் கோவில் வளாக ரிஷப தீர்த்தகுளத்திலும் நடைபெற உள்ளது.