தேவகோட்டை கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :3549 days ago
தேவகோட்டை: தேவகோட்டை ஆதிபராசக்தி கோட்டையம்மன் கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேகம்,தொடர்ந்து அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடந்தது.முன்னதாக குருக்கள் தலைமையில் இரண்டு கால யாக பூஜை நடத்தினர்.* தேவகோட்டை புதூர் அக்ரஹாரம் பகுதியில் அரசரடி முனீஸ்வரர்,ராஜகணபதி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. * தேவகோட்டை அருகேமேலசெம்பொன்மாரியில் உள்ள செல்லை அய்யனார் கோயில், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், ஆஞ்சநேயர் கோயிலுக்கும் 33 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது.விழாவில் குன்றக்குடி பொன்னம்பலஅடிகள் பங்கேற்றார்.