உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆல்கொண்டமால் கோவில் காணிக்கையாக கிடைத்த 41 கால்நடைகள்

ஆல்கொண்டமால் கோவில் காணிக்கையாக கிடைத்த 41 கால்நடைகள்

உடுமலை: ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, 41 கால்நடைகளை பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். உடுமலை சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலுக்கு, பொங்கலன்று ஈன்றெடுக்கும் கன்றுகளை, காணிக்கையாக வழங்குவதை சுற்றுப்பகுதி மக்கள், வழக்கமாக கொண்டுள்ளனர். தைப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலன்று ஈன்றெடுக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலனுக்கு சொந்தம் என்ற நம்பிக்கையை, இன்றளவும் மக்கள் பின்பற்றி வருகின்றனர். நடந்து முடிந்த திருவிழாவில், 35 காளைக்கன்றுகளையும், 6 கிடாரி கன்றுகளையும் பக்தர்கள் தானமாக வழங்கியுள்ளனர். ஐந்து ஆடு மற்றும் இரண்டு சேவல்களும் வழங்கப்பட்டுள்ளன. கட்டண சீட்டு வகையில், 63 ஆயிரத்து 480 ரூபாயும், நன்கொடை சீட்டு வகையில், 97 ஆயிரத்து 800 ரூபாயும், கோவிலுக்கு வசூலாகியுள்ளது. 3 தற்காலிக உண்டியல்களில், மூன்று நாட்களில், 3,95,516 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நிரந்தர உண்டியல்கள் நாளை திறந்து, எண்ணப்பட உள்ளன. பக்தர்கள் காணிக்கையாக அளித்த கால்நடைகள், மாவட்ட நிர்வாக உத்தரவின் அடிப்படையில், புதுவாழ்வு திட்ட பயனாளிகளுக்கு, இலவசமாக வழங்கப்பட உள்ளதாக, இந்து அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !