உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் ரகூத்தம சுவாமிகளின் 443 வது ஆராதனை விழா!

திருக்கோவிலூர் ரகூத்தம சுவாமிகளின் 443 வது ஆராதனை விழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டி ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில், சுவாமிகளின் ஆராதனையை முன்னிட்டு மூல பிருந்தாவனம் வெள்ளிகவசத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பாவபோதகர், உத்திராதி மடத்தின் குருவான ஸ்ரீ ரகூத்தம தீர்த்த சுவாமிகளின் 443 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான காலை 4:00 மணிக்கு மூலபிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம் நடந்தது. 5:00 மணிக்கு ஸ்ரீ ராமர் பூஜை, 6:30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்கரத்துடன் மங்கல ஆரத்தி நடந்தது. குருஜி சத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு முத்ராதானம் செய்து வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முத்ராதானம் பெற்றுக் கொண்டனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவின்படி பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாசார்ய சிம்மலகி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !