உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி மகா பெரியவர் சீடர் நாகேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தி

காஞ்சி மகா பெரியவர் சீடர் நாகேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தி

காஞ்சிபுரம்: காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சீடர், நாகேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று அதிகாலை சித்தியடைந்தார். காஞ்சி சங்கர மடத்தில், மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சீடராக இருந்தவர், ராயபுரம் பாலு என்ற நாகேந்திர சரஸ்வதி சுவாமிகள், 80.கடந்த, 50 ஆண்டுகளாக, காஞ்சி சங்கர மடத்தில், கைங்கரியம் செய்து வந்தார். மகா பெரியவருடன் சதாரா பாத யாத்திரையில் கலந்து கொண்டார். 2013ம் ஆண்டு சன்யாசம் அடைந்து, நாகேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற நாமத்தை பெற்று மடத்திலே தங்கி இருந்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு சித்தியடைந்தார். அவரது உடல், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள, காஞ்சி உபநிஷ பிரம்மேந்திரா மடத்தில், நேற்று மாலை, 3:00 மணிக்கு, அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !