உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த, மேட்டுப்பாளையம் சாலையில், திருநகர் காலனி அருகே உள்ள, பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. நேற்று முன்தினம் காலை, 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, தவரா பூஜை, மண்டபர்ச்சனை, யாக பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. காலை, 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !