உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளி அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்!

பத்ரகாளி அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்!

குன்னுார்: பத்ரகாளி அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர் வலம் நடந்தது.  குன்னுார் அடுத்துள்ள வெலிங்டனில், பத்ரகாளியம்மன்  கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி, தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:00 மணிக்கு மகா கணபதி பூஜை,  வாஸ்து சாந்தி, அங்குராப்பணம், கிராம சாந்தி, அஷ்டதிக்பலி, யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை நடந்தது. மதியம், 3:00 மணிக்கு  முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !