உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்காலம்மன் கோவில் தேர்திருவிழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு

கொங்காலம்மன் கோவில் தேர்திருவிழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு: நீர்வளமும், நிலவளமும், சீரும், சிறப்பும், செழிப்பும் பெற்ற ஈரோட்டில் சாந்த சொரூபியாக எழுந்தருளியிருக்கும் கொங்காலம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பொங்கல் வைபவம் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. ஈரோட்டை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்டோர் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வந்து வழிபட்டனர். மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில், சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மணிக்கூண்டு, பொன்வீதி, கச்சேரி வீதி, பி.எஸ்.பார்க், பிரப்ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக வந்து, சப்பரம் கோவிலையடைந்தது. இன்று சிம்ம வாகன புறப்பாடும், நாளை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !