மஞ்சநாயக்கன்பட்டி பால்குட அபிஷேகம்
ADDED :5214 days ago
பழநி : மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் விழாவில், பக்தர்கள் பால்குட அபிஷேகம் செய்தனர். இங்கு ஆடிமாத கடைசி வெள்ளியன்று, பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்துவர். பால் அபிஷேக விழா நேற்று நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமி தலைமை வகித்தார். வேணுகோபாலசுவாமி கோயிலில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். மூலஸ்தான கோயிலில், அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தன.