உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வையப்பமலை பாலசுப்ரமணியம் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை

வையப்பமலை பாலசுப்ரமணியம் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை

மல்லசமுத்திரம்: வையப்பமலை பாலசுப்ரமணியம் கோவிலில், சத்ரு சம்ஹார பூஜை நடந்தது. திருச்செங்கோடு அடுத்த, வையப்பமலை பாலசுப்பிரமணியம் கோவிலில் செவ்வாய்கிழமை தோறும் சத்ரு சம்ஹார பூஜை நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த விழாவில், சுவாமிக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திரிசதி அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. சுவாமி வெள்ளிக்கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டால், திருமணத் தடை நீங்குதல், தொழில் அபிவிருத்தி, குடும்ப பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பகுதிவாசிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !