ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக 5ம் ஆண்டு விழா
ADDED :3746 days ago
கிள்ளை: பள்ளிப்படை கணபதி நகர் ஆனந்த விநாயகர் கோவிலில் 5ம் ஆண்டு பூர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, 29ம் தேதி காலை விக்கேனஸ்வர பூஜை, புன்னியவாஜனம், கணபதி ஹோமம் நடந்தது. பூஜைகளை வெங்கடேச தீட்சிதர் நடத்தி வைத்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குவினர்கள் மாஜி., எம்.எல்.ஏ., அருள், பொறியாளர் பூமிநாதன், ரங்கசாமி, வெங்கடேசன் செய்திருந்தனர்.