உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே இடத்தில் 100 கோயில்கள்

ஒரே இடத்தில் 100 கோயில்கள்

மத்திய பிரதேசத்தில் கண்டாரியா மகாதேவர் கோயில், தேவி ஜெதாம்பா கோயில், விஸ்வநாத் கோயில், மதங்கேஸ்வரா கோயில் என ஏராளமான கோயில்கள் உள்ளன. ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளதால், இது கோயில் நகரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள லிங்கராஜா கோயில் (12 ஆம் நூற்றாண்டு) ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களைத் தனது வளாகத்திற்குள்ளேயே கொண்டுள்ளது. கோபுரம் 40 மீட்டர் உயரம் கொண்டது. உத்ராஞ்சல் மாநிலத்திலுள்ள யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் இம்மூன்று பகுதிகளும் இமாலயப் புனிதப் பயணத்தின் முக்கியமான இடங்கள் இமயத்தில் அமைந்துள்ள பூக்களின் சமவெளி அமைதியும், மேனமும் நிறைந்தது. இச்சமவெளி புஷ்பவதி நீரோடையால் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதன் அருகே ஏழு பனி மூடிய சிகரங்களில் இடையே ஹேமகுண்ட் சாஹிப் ஏரி அமைந்துள்ளது.

உத்ராஞ்சல் மாநிலத்தில் மலைமுகடுகளில் சீறிப் பாய்ந்த கங்கை, ஷிவாஇக் மலையடிவாரத்தில் அமைந்த ஹரித்துவாரில்தான், சமவெளிப் பரப்பில் சலசலத்து செல்லத் துவங்குகிறது. இங்குள்ள ஹர் -கி- பவுரியில் புனித கங்கை நீராடல் மோட்சத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. மானாதேவி கோயில், தஷ் மகாதேவர் கோயில் சப்தரிஷி ஆசிரமம், பர்மத் ஆசிரமம், சண்டிதேவி கோயில் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ரிஷிகேஷ் உலகின் யோகா தலைநகராக வர்ணிக்கப்படுகிறது. வட இந்தியக் கோயில்களில் மேலே நேராகக் குறைந்து சென்ற சிகரங்கள் பிற்காலங்களில் உள்ளே சிறிது வளைவுடன் கட்டப்பட்டன. இவ்வித சிகரங்களை புவனேஸ்வரில் காணலாம். இங்குள்ள பரமேஸ்வர் கோயில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.பி. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டுகளில் சண்டேளர் என்ற மன்னர்களால் காஜுராஹோவில் தோற்றுவிக்கப்பட்ட கோயில்களின் சிகரங்களும் மூடிய திருச்சுற்றுகளும் குறிப்பிடத்தக்கவை. கோயில்கள் சூழ்ந்த வட இந்தியத் தலங்களுக்குச் சென்று வந்தால் ஏற்படும் மனநிறைவு காரணமாகவே, இங்கு சென்று வருவதைப் புனித யாத்திரையாக மேற்கொள்கின்றனர். பல லட்சம் பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !