மீனாட்சி அம்மன் கோயிலில் விசேஷ அமைப்பு
ADDED :3935 days ago
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு கோபுரத்தின் நடுவிலிருந்து மேற்கு கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவபெருமான் சன்னிதி வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான கட்டடக் கலை திறனை வெளிப்படுத்துகிறது.