விரதம் என்பது...
ADDED :3935 days ago
மனதுக்கு விரதம் கெட்டதை நினைக்காமல் இருப்பது, நாசிக்கு விரதம் கெட்டதை நுகராமல் இருப்பது, வாய்க்கு விரதம் கெட்டதைப் பேசாமல் இருப்பது, கண்களுக்கு விரதம் கெட்டதைப் பார்க்காமல் இருப்பது. காதுகளுக்கு விரதம் கெட்டதைக் கேட்காமல் இருப்பது, இதர உடல் உறுப்புகளுக்கு விரதம் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது. இந்த விரதங்களைக் கடைப்பிடிப்பவர்கள் தங்களுடைய உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்கிறார்கள். இதைச் செய்வதின் நோக்கம் நமக்கு ஆன்ம முன்னேற்றம் ஏற்பட வேண்டும். வாழ்க்கையில் அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான்.