நிர்மலக் கனி!
ADDED :3935 days ago
கிருஷ்ணன் ஒரு பழம். அந்தப் பழம் கீதை எனும் 1,800 பழங்களைத் தந்தது. சுகப்ரம்மம் எனும் கிளி அந்தப் பழங்களைக் கொத்திக் கொத்தி சுவைத்தது. கொய்யா, பலா, மாம்பழம் போன்றவை சீசனல் பழங்கள். ஆனால், கிருஷ்ணன் எனும் பழம் 365 நாட்களும், 24 மணி நேரமும் கூப்பிட்ட உடனேயே உள்ளங்கையில் வந்து அமரும். மற்ற பழங்களில் எல்லாம் கொட்டை, நார், புளிப்பு, இனிப்பு போன்றவை இருக்கும். ஆனால், இவை எதுவுமே இல்லாத, நிர்மலமான, மதுரமான பழம் கிருஷ்ணன்.