சூரியன் பிறந்த நாள் கொண்டாடிய திருத்தலம்!
சூரிய பகவான் தன் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாடினார் என்று புராணம் கூறுகிறது. சூரியனுக்கென்று பல கோயில்கள் இந்தியாவில் உள்ளன. சில கோயில்களில், சூரியன் தன் ஒளிக்கதிர்களை இறைவன்மீது படரவிட்டு வழிபடுவதையும் அறிவோம். இருந்தாலும் தன் பிறந்தநாளான தை மாத சப்தமி திதியன்று திருமீயச்சூர் திருத்தலத்திறகு வந்து, புஷ்கரணி தீர்த்தக்குளம் அமைத்து, தலையில் எருக்கிலை, அறுகம்புல், பசுஞ்சாணம், அட்சதை, மஞ்சள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு நீராடி, அதற்கு எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாத சுவாமியை வழிபட்டுப் பேறுகள் பெற்றான். இந்த நாளே சூரியன் பிறந்த நாளான ரதசப்தமி என்று கொண்டாடப்படுகிறது. இத்திருத்தலம் தஞ்சை மாவட்டம், பேரளத்திற்கு அருகே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது.
இறைவி: ஸ்ரீலலிதாம்பிகை. அப்பர், சம்பந்தரின் பாடல்கள் பெற்ற திருத்தலம். இத்தல இறைவனை ரதசப்தமி அன்று நேரில் வந்து வழிபட்ட சூரிய பகவான். சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தன் ஒளிக்கிரணங்களை காலை 6.00 மணியிலிருந்து 6.30 மணிவரை படரவிட்டு வழிபடுகிறான் இதனை சூரிய பூஜை என்று போற்றுவர்.