உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மணியோசை மீண்டும் கேட்குமா?

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மணியோசை மீண்டும் கேட்குமா?

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரவு நேரத்தில் மீண்டும் கோவில் மணி ஒலிக்குமா? என்று பக்தர்கள் ஏக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். பூலோக வைகுண்டம், பெரியகோவில் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோõவிலில் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை ஆலய மணி கடந்த பல ஆண்டுகளாக ஒலித்து வந்தது. இந்த மணி ஒலிப்பதால் அவ்வப்போது பக்தர்கள் நேரத்தை அறிந்து கொள்ளவும், திருடர்கள் நடமாட்டத்தை தடுக்கவும் ஆலய மணி பயன்பட்டு வந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக ரங்கநாதர் கோவிலில் ஆலய மணி ஒலிப்பதில்லை. எதனால் நிறுத்தப்பட்டது என புரியாத புதிராக உள்ளது. கோவில் மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், எப்போது மீண்டும் துவங்கும் என்று பக்தர்கள் மத்தியில் ஏக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆகையால், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்களுக்காகவும், திருடர் பயத்தை போக்கும் வகையிலும் மீண்டும் ரங்கநாதர் கோவிலில் ஆலய மணி ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !