/
கோயில்கள் செய்திகள் / பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக திருமலையில் சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜை
பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக திருமலையில் சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜை
ADDED :6 minutes ago
திருப்பதி; திருமலையில் முதல் கனும சாலையில் உள்ள அக்ககர்லா கோவிலில் நேற்று காலை சப்த கன்னியர்களுக்கு கார்த்திகை மாத சிறப்பு பூஜை திருப்பதி தேவஸ்தான போக்குவரத்துத் துறையின் சார்பில் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சப்த தேவதைகளுக்கு கார்த்திகை மாத பூஜை நடத்துவது ஒரு பாரம்பரியம். திருப்பதி தேவஸ்தான ஓட்டுநர்களும், உள்ளூர்வாசிகளும் ஒன்றாக இணைந்து பிரமாண்டமாக பூஜைகள் செய்தனர். திருப்பதி தேவஸ்தான போக்குவரத்துத் துறையின் சார்பில் சப்த மாதர்களுக்கு சேலை சாற்றப்பட்டது. கனும சாலையில் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக இந்த பிரார்த்தனை செய்யப்பட்டது. விழாவில் முரளிகிருஷ்ணா, அன்ன பிரசாதம் துணை அலுவலர் ராஜேந்திரா, போக்குவரத்து மேளாலர் லட்சுமி பிரசன்னா மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.