விரும்பிய வரம் தருபவர்!
ADDED :3934 days ago
கோவிலில் சிவ தரிசனத்திற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர். சிவ ரகசியம் என்னும் ஆகமத்தில் இவரின் பெருமை பற்றி கூறப்பட்டுள்ளது. இவருக்கு ரிஷபதேவர், நந்திகேஸ்வரர் என்றும் பெயருண்டு. சிவ பக்தர்களில் இவரே தலைமையானவர். நந்தீஸ்வரர் மூலமாகவே சிவ ஆகமங்கள் அனைத்தும் வெளிப்பட்டன. அடியவர்களுக்கு அருள்புரியும் போதெல்லாம் சிவபார்வதி நந்தி மீது எழுந்தருளி காட்சியளிப்பர். எப்போதும் சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை தர்மத்தின் வடிவமாகப் போற்றுவர். இவரின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று சிவன் நடனம் புரிவதாக ஐதீகம். வெள்ளை உள்ளம் படைத்த இவரை வழிபட்டால் விரும்பிய வரம் அனைத்தும் கிடைக்கும்.