பிதுர்தோஷம் என்பது என்ன?
ADDED :3934 days ago
இறந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை சரியாகச் செய்யவில்லை என்றால் ஏற்படுவது பிதுர் தோஷம். இதிலிருந்து விடுபட ராமேஸ்வரம் சென்று தில (எள்) ஹோமம் செய்யலாம். அல்லது திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம், நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) போன்ற திருத்தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.