உடுமலை ஐம்பொன் ஆஞ்சநேய விக்ரஹம் பிரதிஷ்டை
உடுமலை: உடுமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், ஐம்பொன் ஆஞ்சநேய விக்ரஹம், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
உடுமலை, பெரியகடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் யாகம் மற்றும் ஐம்பொன் ஆஞ்சநேய விக்ரஹம் பிரதிஷ்டை விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை முதல் கால பூஜை நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து, ஆஞ்சநேயர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7:30 மணிக்கு, மாணவ, மாணவியரின் நலனுக்காக, ஹயக்ரீவர் யாகம் நடந்தது. பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை
நடந்தது.
பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், லட்சுமி நரசிம்மர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆண்டாள், சந்தான கோபாலகிருஷ்ணன், லட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.