உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனகாபுத்துார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அனகாபுத்துார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அனகாபுத்துார்: அனகாபுத்துார், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.

அனகாபுத்துார், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆலய திருப்பணி முடிந்து, நேற்று,
கும்பாபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை, விசேஷ ஹோமம், யாத்ராதான சங்கல்பம் நடந்தது. 9:30 மணிக்கு, கலச புறப்பாடு தொடங்கி, 10:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:15 மணிக்கு, விநாயகர், முருகன், அங்காளம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 12:00 மணிக்கு அன்னதானமும், இரவு 7:30க்கு, அம்மன் வீதி உலாவும் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !