காமாட்சி அம்மன் கோவில் திருப்பணிக்கு பாலாலயம்
ADDED :3534 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மூலவர் விமானம் உட்பட ஐந்து சன்னிதிகளுக்கு, நேற்று, பாலாலய பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவில் திருப்பணி, 2014ல் துவங்கியது. முதலில் நான்கு ராஜகோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற்று, திருப்பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று, காமாட்சி அம்மன் மூலவர் விமானம், அன்னபூரணி, சரஸ்வதி, துர்க்கை அம்மன், ஆதிசங்கரர் ஆகிய சன்னிதி விமானங்களில் திருப்பணிகள் செய்ய, நேற்று காலை 9:00 மணியளவில், பாலாலய பூஜைகள் நடைபெற்றன.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், கோவிலில் உள்ள அனைத்து சன்னிதிகளிலும், சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தரைத்தளத்தில் கல் பதிக்கப்படுகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வரும் ஜூலையில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.