ரேணுகாதேவி கோயிலில் எண்ணெய்க்காப்பு உற்சவம்
ADDED :3648 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ரேணுகாதேவி கோயிலில் உற்சவ விழா , சத்குரு தியாகராஜசுவாமிகளின் ஆராதணை விழா கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று எண்ணெய்காப்பு உற்சவ விழா நடந்தது.
அம்மனுக்கு அதிகாலையில் எண்ணெய்காப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உற்சவ மண்டபத்தில் ஊஞ்சல் வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு பஜனை வழிபாடு நடந்தது. மாலையில் கம்மவார் சங்க தலைவர் சுகேந்திரன் தலைமையில் சத்குரு தியாகராஜசுவாமிகள் ஆராதனை விழா துவங்கியது. சங்கீத வித்யாலயா மாணவர்கள், இசை ஆர்வலர்கள், இசை நிகழ்ச்சி நடத்தி வழிபட்டனர்.