உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயானந்த தீர்த்தர் சுவாமி 8ம் தேதி புதுச்சேரி வருகை

விஜயானந்த தீர்த்தர் சுவாமி 8ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: மைசூர் அவதுாத தத்த பீட இளைய பீடாதிபதி தத்த விஜயானந்த தீர்த்தர் சுவாமிகள், வரும் 8 ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

வில்லியனுார் அடுத்த மங்கலம் செல்லும் வழியில், 1999ம் ஆண்டு, அவதுாத தத்த பீடம் அமைக்கப்பட்டு, அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம், துயர் துடைப்பு உதவிகள், நாமசங்கீர்த்தனம், அன்னதானம் நடந்து வருகிறது. உலக நன்மைக்காக உலகளாவிய அளவில் ஹனுமன் சாலீஸா பாராயணமும் நடக்கிறது.

மைசூரில் உள்ள அவதுாத தத்த பீட இளைய பீடாதிபதி தத்த விஜயானந்த தீர்த்தர் சுவாமிகள், வரும் 8 ம் தேதி மங்கலம் ஆசிரமம் வருகிறார். அன்று மாலை 6:30 மணிக்கு, அருளாசி மற்றும் உபன்யாசம் நிகழ்த்துகிறார். முன்னதாக, ஹனுமன் சாலீஸா கூட்டு பாராயணம், ஆசிரம பஜனை மண்டலியினரின் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !