முத்துப்பேட்டையில் தேர் பவனி
ADDED :3539 days ago
கீழக்கரை: முத்துப்பேட்டை தூய காணிக்கை அன்னை சர்ச்சில் தேர் பவனி நடந்தது. கடந்த சிவகங்கை மறைமாவட்ட முதன்மை பாதிரியார் லூர்துராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக ஆடம்பர திருப்பலி, தேர் பவனி நடந்தது. சிறுவர்களுக்கு புது நன்மை, திவ்ய நற்கருணை நடந்தது. முத்துப் பேட்டை பாதிரியார் சந்தியாகு, பாதிரியார்கள் ஜீவா, காந்தி சவரி முத்து, பிரிட்டோ, பியோசெலஸ், பாக்கியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பிய இறைமக்கள் செய்திருந்தனர்.