தூத்துக்குடி கோயிலில் ஆவணி அவிட்ட விழா
ADDED :5171 days ago
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஆவணி அவிட்ட விழா நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.உலக மேன்மைக்காகவும், நம் பாரத தேசத்தின் பண்பாடு, கலாச்சாரம் தழைத்தோங்கிடவும், வாழ்வின் நெறிமுறைகளைக் கடைபிடித்து ஆன்மீகத்தை போற்றிப் பாதுகாத்திடவும் விஸ்வகர்மாவினர் கடைபிடிக்க வேண்டியவைகளில் ஒன்றுதான் ஆவணி அவிட்ட விழா ஆகும். இவ்விழா தூத்துக்குடி, மேற்கு வரதவிநாயகர் ஆலயத்தில் நடந்தது. காலையில் கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்று காலை பூணூல் அணியும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான விஸ்வகர்மாவினர் கலந்து கொண்டனர்.