உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதிக்காக மதுரையில் ஆதிபராசக்தி பக்தர்கள் ஊர்வலம்

உலக அமைதிக்காக மதுரையில் ஆதிபராசக்தி பக்தர்கள் ஊர்வலம்

மதுரை : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், உலக அமைதி, மழை, தொழில் வளம் செழிக்க மதுரையில் ஆன்மிக எழுச்சி ஊர்வலம் நடந்தது. பங்காரு அடிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.தெப்பக்குளத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கலசம், விளக்கு, முளைப்பாரிகளுடன், மேளதாளம் முழங்க பக்தர்கள் காமராஜர் சாலை, குருவிக்காரன் சாலை வழியாக பனகல் ரோட்டை அடைந்தனர். அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டடம் எதிரே அமைக்கப்பட்ட மேடையிலிருந்தவாறு, பங்காரு அடிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகள், துணை தலைவர் செந்தில்குமார், போஸ் எம்.எல்.ஏ., மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் பல்வேறு பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். பகல் 3 முதல் இரவு 8 மணி வரை தெப்பக்குளம், காமராஜர் சாலை, பனகல் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இன்று முதல் ஆக. 24 வரை மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்காரு அடிகள் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !